twitter
    Find out what I'm doing, Follow Me :)

ராடன் அறிவிப்பு

ரடான் நிறுவனத்தில் நீங்களும் பங்கேற்கலாம்

ரடான் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சி தொடர்களுக்கும் ரசிகர்களாகிய தாங்கள் கொடுத்து வரும் ஆதரவு மிகப்பெரியது. ரடான் நிறுவனத்தின் அத்தனை வெற்றிகளிலும் ரசிகர்களின் பங்கு அளவிட முடியாதது. அத்தகைய ரசிகர்களை கெளரவிக்கும் பொருட்டு ரடான் நிறுவனம் பல்வேறு வாய்ப்புகளை ரசிகர்களுக்கு அளிக்க முன் வந்துள்ளது.

அதன் முதற்கட்டமாக http://www.radaan.tv என்ற ராடன் நிறுவனத்தின் வலைதளத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். தங்களின் கருத்துக்கு திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள் பதிலளிப்பார்கள். சிறந்த கருத்துக்களுக்கு பரிசுகளும் நேயர்களுக்கும் வழங்கப்படும். நீங்கள் வலைப்பூ (Blog) வைத்திருப்பவரா? உங்களின் பதிவுகளை எங்களின் வலைத்தளத்தில் உள்ள Creative Corner பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் மிகச்சிறந்த பதிவுகள் எங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு எங்கள் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும். உலகெங்கிலும் உங்கள் படைப்புக்கள் வெற்றி நடை போடட்டும்.

திறமையான எழுத்தாற்றல் உடையவர்களுக்கு எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் நாங்கள் அளிக்க திட்டமிட்டுள்ளோம். உங்கள் கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், எதுவாயினும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்யுங்கள்.


வலைதள முகவரி : www.radaan.tv
(உங்கள் கருத்துக்களை இந்த வலைப்பூவில் பகிர்ந்துகொள்வதை விட எங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்)

13 comments:

ரவி said...

ராடன் டிவி இணைய தளத்தில் கருத்துக்களை பகிரும் வசதியில்லையே ??

வலைப்பதிவு பின்னூட்டம் வசதி எங்கே உள்ளது ????

வேலன். said...

சின்னத்திரையில் வெற்றி நடை போடும் தாங்கள் பதிவுலகிலும் வெற்றியடைய இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

டிவிஎஸ்50 said...

வருக! வருக!!.... இணையத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களை சேவை பற்றி என் வலைப்பதிவில் எழுதி உள்ளேன். http://tvs50.blogspot.com/2010/01/raadan-tv-focus-on-bloggers.html

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாழ்த்துகள்...

Vadielan R said...

தொலைக்காட்சியில் பெற்ற வெற்றியை இணையத்துறையிலும் வலைப்பதிவிலும் திரட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் ஊக்கம் இன்னும் பதிவர்களை உற்சாகப்படுத்தும் புதிய பதிவர்கள் நிறைய தோன்றுவார்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

மணிஜி said...

நல்ல முயற்சி.புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

Venkatesh said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!!

வெங்கடேஷ்
திரட்டி.காம்

Anonymous said...

உங்கள் முயற்சியால் பலர் பயனடைய வாய்ப்புள்ளது உங்கள் நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள்...

சூர்யா ௧ண்ணன் said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்!!

pudugaithendral said...

வாழ்த்துக்கள்.

suvaiyaana suvai said...

இணையத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Unknown said...

நல்ல திட்டம்! தொடரட்டும்….

Chitra said...

Best wishes! More info, please........