twitter
    Find out what I'm doing, Follow Me :)

ராடன் அறிவிப்பு

ரடான் நிறுவனத்தில் நீங்களும் பங்கேற்கலாம்

ரடான் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கும், தொலைக்காட்சி தொடர்களுக்கும் ரசிகர்களாகிய தாங்கள் கொடுத்து வரும் ஆதரவு மிகப்பெரியது. ரடான் நிறுவனத்தின் அத்தனை வெற்றிகளிலும் ரசிகர்களின் பங்கு அளவிட முடியாதது. அத்தகைய ரசிகர்களை கெளரவிக்கும் பொருட்டு ரடான் நிறுவனம் பல்வேறு வாய்ப்புகளை ரசிகர்களுக்கு அளிக்க முன் வந்துள்ளது.

அதன் முதற்கட்டமாக http://www.radaan.tv என்ற ராடன் நிறுவனத்தின் வலைதளத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். தங்களின் கருத்துக்கு திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள் பதிலளிப்பார்கள். சிறந்த கருத்துக்களுக்கு பரிசுகளும் நேயர்களுக்கும் வழங்கப்படும். நீங்கள் வலைப்பூ (Blog) வைத்திருப்பவரா? உங்களின் பதிவுகளை எங்களின் வலைத்தளத்தில் உள்ள Creative Corner பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் மிகச்சிறந்த பதிவுகள் எங்கள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு எங்கள் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும். உலகெங்கிலும் உங்கள் படைப்புக்கள் வெற்றி நடை போடட்டும்.

திறமையான எழுத்தாற்றல் உடையவர்களுக்கு எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் நாங்கள் அளிக்க திட்டமிட்டுள்ளோம். உங்கள் கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், எதுவாயினும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்யுங்கள்.


வலைதள முகவரி : www.radaan.tv
(உங்கள் கருத்துக்களை இந்த வலைப்பூவில் பகிர்ந்துகொள்வதை விட எங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்)